Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் - திருவள்ளூரில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

09:26 AM Jul 15, 2024 IST | Web Editor
Advertisement

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு பரிமாறினார்.

Advertisement

தமிழ்நாட்டின் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த முதலமைச்சரின் காலை உணவு திட்டம், முதல் கட்டமாக கடந்த 15.9.2022 அன்று 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொடங்கிவைக்கப்பட்டது.

இதன் மூலம்  1.14 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றனர். இந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத்  தொடர்ந்து, கடந்த  25.8.2023 ல் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்  பிறந்த ஊரான திருக்குவளையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 30,992 அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு  முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையும் படியுங்கள் : சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர் கைது! – 500 கிலோ வெடி மருந்து பறிமுதல்!

பின்னர், திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இன்று காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.இந்தத் திட்டத்தின் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட்டன. இதன் மூலம் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் 2.23 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். பின்னர், மாணவர்களுக்கு உணவு ஊட்டிவிட்டு, அவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவருந்தினார்.

Tags :
காலைஉணவுத்திட்டம்BreakfastSchemeCMOTamilNaduGovtAidedSchoolMKStalinTNGovt
Advertisement
Next Article