Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரேசில் வெள்ளப்பெருக்கு! 179 பேர் உயிரிழப்பு, 33 பேர் மாயம்!

07:25 PM Jul 02, 2024 IST | Web Editor
Advertisement

பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 179 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Advertisement

பிரேசிலின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டி டு சுல் நகரில் கடந்த மே மாதம் முதல் பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் நகரத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2.39 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது;

ஜூன் மாத நடுவில் வெள்ளம் வடியத் தொடங்கியதில் இருந்து மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக நகர்ப்புற வடிகால் அமைப்புகளை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கைபா ஆறு நிரம்பியதையடுத்து போர்டோ அலெக்ரே பகுதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ரியோ கிராண்டு டொ சுல் மாநிலத்தை மறுசீரமைக்க 15 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆர்ஜெண்டினா மற்றும் உருகுவே எல்லையில் அமைந்துள்ள ரியோ கிராண்ட் டொ சுலிலின் விவசாய மற்றும் கால்நடை பண்ணைகளிலிருந்து 89 ஆயிரம் மக்கள் மற்றும் 15 ஆயிரம் விலங்குகள் ராணுவம் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் உதவியால் மீட்கப்பட்டனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
brazilCivil Defence AgencydisasterFlood
Advertisement
Next Article