Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

Lollipop ஆர்டர் செய்த சிறுவன்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்.. காரணம் என்ன?

8 வயது சிறுவன் லாலிபாப்களை ஆர்டர் செய்து தனது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
07:22 PM May 07, 2025 IST | Web Editor
8 வயது சிறுவன் லாலிபாப்களை ஆர்டர் செய்து தனது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
Advertisement

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் ஷாப்பிங் மக்களின் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது, முன் எப்போதும் இல்லாத வகையில் வசதியை வழங்குகிறது. மளிகை சாமான்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ் வரை, ஆர்டர் செய்தவுடன்  வீட்டு வாசலுக்கே வந்து டெலிவரி செய்யப்படுகிறது. சில பொருள்கள் ஆர்டர் செய்த அதே நாளில் கூட டெலிவரி செய்யப்படுவதுண்டு. செலக்சன், தரமான பொருள்கள், ரிட்டன், கேரண்டி, உள்ளிட்ட காரணங்களால் ஆன் லைன் ஷாப்பிங் தளங்களின் வியாபாரம் பலமடங்கு உயர்ந்து வருகின்றன.

Advertisement

இந்த சூழலில், அமெரிக்காவில் உள்ள கென்டக்கியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 8 வயது மகனுக்கு விளையாட செல்போன் கொடுத்தார். அப்போது அந்த சிறுவன் தனது தாய்க்கு தெரியாமல் அமேசானில் லாலிபாப்பளை ஆர்டர் செய்தார். எதிர்பாராத நேரத்தில் அவரது வீட்டிற்கு 22 லாலிபாப் பெட்டிகள் டெலிவரி செய்யப்பட்டது. இதனைப் பார்த்து அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். பின்னர் செல்போனை பரிசோத்தித்தபோது அவருக்கு மேலும் அதிர்ச்சியளித்தது. அந்த லாலிபாப்பிற்காக சுமார் ரூ.3.3 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள் : ‘டிங் டாங் டிச்’ விளையாடிய இளைஞர்கள்.. நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்!

அதனுடன் மேலும், சில பெட்டிகள் டெலிவரி செய்யப்படுவதற்காக வந்துக்கொண்டிருந்தன. அவரால் அந்த டெலிவரியை ரத்து செய்யமுடியவில்லை. அதனால் அவர் தபால் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு அதனை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார். மேலும், அமேசானை தொடர்பு கொண்ட அவர் இதுகுறித்து பேசி பணத்தை திரும்ப கேட்டார். தங்கள் ஊழியர்கள் டெலிவரி செய்யப்பட்ட பெட்டிகளை திரும்ப பெற்றுக்கொண்ட பிறகு பணம் திருப்பி அனுப்பப்படும் என அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பேசிய அந்த பெண், "இதனை பார்த்த எனக்கு மயக்கமே வந்துவிட்டது. டெலிவரி ஊழியர்கள் யாரும் இன்னும் என் வீட்டிற்கு வரவில்லை" என்று கூறினார். அவர் தனது பணத்தை பெற வங்கியை தொடர்பு கொண்டார். மேலும், பல செய்தி நிறுவனங்களுக்கு பேட்டியளித்தார். அதன்பிறகு அமேசான் தன்னை தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி தருவதாக கூறியதாக இணைய பதிவில் தெரிவித்திருந்தார்.

Tags :
AmazonboyKentuckyLollipopMoneynews7 tamilnews7 tamil updateOnline ShoppingViral
Advertisement
Next Article