Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தள பதிவு!

03:25 PM Apr 23, 2024 IST | Web Editor
Advertisement

‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’  என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Advertisement

உலகெங்கிலும் உள்ள எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை கௌரவிப்பதற்காக உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்,  புத்தக தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.  அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“புதிய உலகத்திற்கான திறவுகோல் - அறிவின் ஊற்று - கல்விக்கான அடித்தளம் - சிந்தனைக்கான தூண்டுகோல் - மாற்றத்திற்கான கருவி - மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை!

புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்;  பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்!

புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல்,  பல மாணவர்களுக்கும் - நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன்.  கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
BooksCMOTamilNaduMK StalinWorld BooK and Copyright DayWorld Book day
Advertisement
Next Article