Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விமான நிறுவனங்களுக்கு தொடரும் #BombThreats... இன்று மட்டும் 25 விமானங்களுக்கு மிரட்டல்!

05:30 PM Oct 25, 2024 IST | Web Editor
Advertisement

ஒரே நாளில் 25க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அண்மையாக பள்ளி, கல்லூரி மற்றும் விமானங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அந்நிறுவனங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. நேற்று திருப்பதியில் உள்ள ஹோட்டல்களுக்கும் ஒன்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மட்டும் 25-க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் 7 விமானங்களுக்கும், விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் தலா 7 விமானங்களுக்கும், ஏர் இந்தியா நிறுவனத்தின் 6 விமானங்களுக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இண்டிகோ நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது;

உதய்பூரில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் 6E 2099 விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பாதுகாப்பு ஏஜென்சி வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, விமானம் புறப்படுவதற்கு முன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இண்டிகோ நிறுவனத்தில் மிரட்டல் விடுக்கப்பட்ட விமானங்கள்;

6E 87 (கோழிக்கோடு முதல் தம்மாம்), 6E 2099 (உதய்பூர் முதல் டெல்லி), 6E 11 (டெல்லி முதல் இஸ்தான்புல்), 6E 58 (ஜித்தாவிலிருந்து - மும்பை), 6E 17 (மும்பையிலிருந்து இஸ்தான்புல் வரை) , 6E 108 (ஹைதராபாத் முதல் சண்டிகர்) மற்றும் 6E 133 (புனே முதல் ஜோத்பூர் வரை) ஆகிய 7 இண்டிகோ விமானங்களுக்கு இன்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 நாட்களில் இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும்  275க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பெரும்பாலான மிரட்டல் செய்திகள் சமூக ஊடகங்கள் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
Air IndiaAirlinesbomb threatflightsIndiGoSpiceJetvistara
Advertisement
Next Article