Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் இருந்து மும்பை சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

01:03 PM Jun 01, 2024 IST | Web Editor
Advertisement
சென்னையிலிருந்து, மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, மும்பையில் விமானம் அவசரமாக தரையிரக்கப்பட்டது. 

 

Advertisement

கடந்த 28ஆம் தேதி டெல்லியில் இருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.  அதனை தொடர்ந்து பயணிகள் அவசரகதவு வழியாக வெளியேற்றப்பட்டு விமானம் முழுக்க வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை செய்யப்பட்டது.  இறுதியில் மிரட்டல் செய்தி போலி என தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் நேற்று டில்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  இந்த நிலையில், இன்று சென்னையிலிருந்து, மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை இண்டிகோ நிறுவனத்தின் ’6இ - 5134’ என்ற விமானம் 172 பயணிகளுடன் மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.  இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து,  மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.  உடனடியாக அதிலிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.  தொடர்ந்து,  விமானம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.  இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

Tags :
bomb threatChennaiflightMumbai
Advertisement
Next Article