Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஜய் பிறந்தநாளில் போக்கிரி ரீ-ரிலிஸ் - டிரெய்லர் வெளியீடு!

09:44 PM Jun 15, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த ‘போக்கிரி’ திரைப்படம்  ரீ- ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. 

Advertisement

கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி பொங்கலன்று விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் போக்கிரி. இத்திரைப்படத்தில் நடிகர் வடிவேலு, அசின், நாசர், பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்தராஜ், ஸ்ரீமன், வின்சென்ட் அசோகன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. படமும் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் வரும் 21-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் ரீ-ரிலிஸ் ஆகிறது. அன்று விஜய்யின் மற்றொரு ஹிட் படமான துப்பாக்கியும் வெளியாகவுள்ளது.  இந்நிலையில் இப்படத்திற்கான 4கே டிரெய்லரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் 50வது பிறந்தநாள் வருகிற 22ம் தேதி வருகிறது. இதனை அவரது ரசிகர்களும், கட்சியினரும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாகவே அவர் நடித்த போக்கிரி மற்றும் துப்பாக்கி திரைப்படம்  21-ம் தேதி வெளியாகவுள்ளது.

Tags :
AsinPokkiriPrabhu DeavaRe-RealeseTrailervijay
Advertisement
Next Article