Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாரல் மழையில் நனைந்தவாறே படகு சவாரி... உதகையில் தொடர் விடுமுறையை கொண்டாடும் சுற்றுலா பயணிகள்!

01:49 PM Oct 13, 2024 IST | Web Editor
Advertisement

உதகையில் சாரல் மழையில் நனைந்தவாறே, படகு சவாரி செய்து வார
விடுமுறையை சுற்றுலா பயணிகள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே
மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். அதேபோல் செப்டம்பர், அக்டோபர்
மாதங்களில் குளிர்கால சீசன் நிலவும். இச்சமயங்களில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இங்கு வருகை புரிந்து சுற்றுலா தலங்களை ரசித்து செல்வர். அந்த வகையில் குளிர்கால சீசனையொட்டி, தற்போது உதகையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

குறிப்பாக உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம்,
தேயிலை பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும் இந்தவார தொடர் விடுமுறையையொட்டி, வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று இந்த சாரல் மழையில் நனைந்தவாறே, மிதி படகு மற்றும் துடுப்பு
படகு சவாரி செய்து உற்சாகமடைந்தனர். மேலும் மோட்டார் படகுகளில் சுற்றுலா
பயணிகள் சவாரி செய்து செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதிக சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக கூடலூர் தேசிய நெடுஞ்சாலை, உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

Tags :
boat rideootyTouristsVacation
Advertisement
Next Article