Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 40 பேர் மாயம்!

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
08:05 PM Aug 18, 2025 IST | Web Editor
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
Advertisement

நைஜீரியா மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு. இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இங்கு படகை இயக்குபவர்கள் லைப் ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு கவசங்களைப் பயன்படுத்தத் தவறுகின்றன. இதனால் இங்கு விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன.

Advertisement

இந்த நிலையில் நேற்று மதியம் சொஹொடா மாகாணம் கடா கிராமத்தை சேர்ந்த 50 பேர் ஆற்றில் படகு மூலம் கொரொன்யா பகுதியில் உள்ள சந்தைக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அப்பகுதியில் குழுக்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இது வரை 10 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் 40 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். படகு கவிழ்ந்து 24 மணி நேரம் ஆன நிலையில் 40 பேரும் இறந்திருந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Tags :
BoatlatestNewsNigeriariverWorldNews
Advertisement
Next Article