Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கருப்பு சிவப்புக்காரர்கள்தான் தமிழ்நாட்டின் காவலுக்குக் கெட்டிக்காரர்கள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

விழிப்புடன் இருந்து, கருப்பு சிவப்புக்காரர்கள்தான் தமிழ்நாட்டின் காவலுக்குக் கெட்டிக்காரர்கள் எனக் காட்ட வேண்டிய நேரம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
01:13 PM Oct 26, 2025 IST | Web Editor
விழிப்புடன் இருந்து, கருப்பு சிவப்புக்காரர்கள்தான் தமிழ்நாட்டின் காவலுக்குக் கெட்டிக்காரர்கள் எனக் காட்ட வேண்டிய நேரம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "SIR எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பாஜக ஆயத்தமாகிவிட்டது. மக்களின் வாக்குரிமையையே பறிக்கும் இந்த அநியாயம் ஏற்கெனவே பீகாரில் அரங்கேற்றப்பட்டதைப் பார்த்தோம். விழிப்புடன் இருந்து, கருப்பு சிவப்புக்காரர்கள்தான் தமிழ்நாட்டின் காவலுக்குக் கெட்டிக்காரர்கள் எனக் காட்ட வேண்டிய நேரம் இது.

Advertisement

இதற்காக, வரும் 28-10-2025 மாமல்லபுரத்தில் நடைபெறும் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பயிற்சிக் கூட்டத்தில் உடன்பிறப்புகளைச் சந்திக்க வருகிறேன்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நாம் உழைப்பை விதைத்தால்தான், மாநில அளவிலான வெற்றியை அறுவடை செய்ய முடியும்! வார்டு நிர்வாகி முதல் மாநில நிர்வாகி வரை ஒவ்வொருவரும் அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெற உழைப்போம், ஏழாவது முறையும் கழக ஆட்சியை அமைப்போம்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
CHIEF MINISTERM.K. Stalinsirtamil nadu
Advertisement
Next Article