Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தொடர் தீவிரவாத தாக்குதலுக்கு பாஜகவின் தவறான கொள்கையே காரணம்" - எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்!

12:35 PM Jul 16, 2024 IST | Web Editor
Advertisement

தொடர்ச்சியான தீவிரவாத தாக்குதலுக்கு பாஜகவின் தவறான கொள்கைகளே காரணம் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தேசா வனப்பகுதியில் உள்ள தாரி கோடே எனுமிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நேற்று இரவு ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படைப்பிரிவினர் மற்றும் ஜம்மு காஷ்மீரின் காவல்துறையின் சிறப்பு அதிரடிக் குழுவினர் இணைந்து தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இந்திய  ராணுவ வீரர்கள் 4 பேர் உட்பட அதிகாரி ஒருவரும் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தொடர்ச்சியான தீவிரவாத  தாக்குதலுக்கு பாஜகவின் தவறான கொள்கையே காரணம் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது :

"ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த மற்றொரு தாக்குதலில் நமது ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். ராணுவ வீரர்களுக்கு எனது பணிவான அஞ்சலியை செலுத்தி, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படியுங்கள் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம்! ஹைதராபாத் விரைந்தது தனிப்படை!

இதுபோன்ற கொடூர சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடப்பது மிகுந்த வருத்தமும், கவலையும் அளிக்கிறது. தொடர்ச்சியான தீவிரவாத தாக்குதல்கள் ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலையை வெளிப்படுத்துகின்றன. பாஜகவின் தவறான கொள்கைகளால் நமது ராணுவ வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு குறைபாடுகளுக்கு அரசு முழுப்பொறுப்பேற்க வேண்டும். நாட்டுக்கும், ராணுவ வீரர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியனின் கோரிக்கையாக உள்ளது. இந்த துயரமான நேரத்தில், தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் ஒன்றுபட்டு நிற்கிறது"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
diedJammuKashmirRahulGandhisoldiersTerroristAttacks
Advertisement
Next Article