Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"உத்தரப் பிரதேசத்தில் பாஜக 9 தொகுதிகளையும் இழக்கும்" - சமாஜ்வாதி கட்சி தலைவர் #AkhileshYadav பேட்டி

06:31 PM Nov 22, 2024 IST | Web Editor
Advertisement

உத்தரப் பிரதேசத்தில் பாஜக 9 தொகுதிகளையும் இழக்கும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Advertisement

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல்களுடன் பிற மாநிலங்களில் காலியாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் (நவ.20) இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (நவ.23) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதையும் படியுங்கள் : #Goa | மீன்பிடி படகுடன் மோதிய இந்திய கடற்படை நீர்மூழ்கி கப்பல்… 2 மீனவர்கள் மாயம்!

இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 5 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக 9 தொகுதிகளையும் இழக்கும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ் இது தொடர்பாக கூறுகையில், "தேர்தலுக்கு பிந்தய கருத்துக் கணிப்புகள் எப்போதும் துல்லியமாக இருக்காது. பொதுமக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். உத்தரப் பிரதேசத்தில் பாஜக 9 தொகுதிகளையும் இழக்கும்" என்று தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Next Article