Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தொகுதி மறுசீரமைப்பு செய்து, 10 மாநிலங்களில் கவனம் செலுத்தி பாஜக ஆட்சி அமைக்கும்” - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

தொகுதி மறுசீரமைப்பு செய்து பாஜக 10 மாநிலங்களில் கவனம் செலுத்தி ஆட்சி அமைக்கும் என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.
09:25 PM Feb 27, 2025 IST | Web Editor
Advertisement

தொகுதி மறுசீரமைப்பு குறித்து சட்டத் துறை அமைச்சர் ரகுபதி  விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  “1951, 1961, 1971 ஆகிய ஆண்டுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டன. இதில் 1951ஆம் ஆண்டு கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் 7.3 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடாளுமன்றத்திற்கு 494 தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டன. அதேபோல் 1961ல் 8.4 லட்சம் மக்கள் கொண்ட தொகை நாடாளுமன்றத்திற்கு 522 தொகுதிகளாக மறுசீரமைக்கப்பட்டது. 1971ஆம் ஆண்டு 10.1 மக்கள் கொண்ட தொகை நாடாளுமன்றத்திற்கு 543 தொகுதிகள் கொண்டு வரப்பட்டன.

தென் மாநிலங்களில் குடும்ப கட்டுப்பாடு சிறப்பாக அமலபடுத்தியதன் விளைவாக மக்கள் தொகைகணக்கெடுப்பில் விகிதாச்சார எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதன் அடிப்படையில் 1976ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, குடும்ப கட்டுபாடுகளை சிறப்பாக சில மாநிலங்கள் கையாண்டது. எனினும் அந்த மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைக்கூடாது என்பதற்காக அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதாவது 2001ஆம் ஆண்டு வரை நாடளுமன்ற தொகுகள் இருந்தபடியே இருக்க வேண்டும் என அரசியல் திருத்தம் கொண்டு வந்தார். அதன் அடிப்படையில் அந்த 543 தொகுதிகள் நீடித்தது.

அதன்பிறகு பாஜக கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கேட்டுக்கொண்டதன் பேரில் மக்களவை தொகுதிகள் அடுத்த 25 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. இதன்படி  543  நாடாளுமன்ற தொகுதிகளில் எண்ணிக்கை  2026ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.  கடந்தாண்டு மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தொகுதி மறுசீரமைக்கப்பட்டு 2031ல் பெண்களுக்கான இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்றார். அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் பாதிப்பு வரும் என்ற கண்ணோட்டத்தை முன் வைக்கிறோம்.

தற்போது நாடளுமன்றத்தில் தென் மாநிலங்கங்களின் பிரதிநிதித்துவம் 23.7 % இருக்கிறது. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுத்து தொகுதி மறுசீரமைப்பு செய்தால்  தென் மாநில பிரதிநிதித்ததும் 18.97 % ஆக குறையும். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் மொத்தம் 848 நாடளுமன்றத் தொகுதிகள் வரும். அதன்படி தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் அதிகம் கிடைத்தாலும் கூட  தென் மாநில பிரதிநிதித்துவம் 19.34% தான் இருக்கும்.

அதனால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய கூடாது என்பதுதான் எங்களின் தலையாகிய கோரிக்கை. இன்றைக்கு உத்திரப் பிரதேசத்தில் 80 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தொகுதிகள் 848 ஆக உயர்ந்தால், உத்திரப் பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 143 ஆக அதிகரிக்கும். 14.7 % இருக்கும் அம்மாநில பிரநிதித்துவம் 16.86 %-மாக உயரும். அதே போல் பீகாரில் உள்ள 40 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 79 ஆக உயரும். அதாவது 7.36 % பிரநிதித்துவம் 9.31ஆக உயரும். மேலும் மத்திய பிரதேசத்தில் 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அங்கு 5.34 என்ற  பிரநிதித்துவம் 6.13 ஆக உயரும்.

சதவிகித அடிப்படையில் பார்த்தால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைக்கிறது. வட மாநிலங்களுக்கு அதிகரிக்கிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் இந்தி மொழி பேசுகிற மாநிலங்களை வைத்துக்கொண்டு பாஜக ஆட்சிக்கு வரும். இதுதான் அவர்களின் வியூகம். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதி மறுசீரமைப்பு செய்து 10 மாநிலங்களில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். மற்ற மாநிலங்களில் 0 தொகுதிகளை வாங்கினால் கூட அவர்கள் ஆட்சியமைக்க முடியும்”

இவ்வாறு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

Tags :
amit shahLok Sabha SeatsRegupathy
Advertisement
Next Article