Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பாஜக ஜனநாயகத்தை பலவீனப்படுத்த விரும்புகிறது!” - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

04:02 PM Apr 27, 2024 IST | Web Editor
Advertisement

பாஜக ஜனநாயகத்தை பலவீனப்படுத்த விரும்புகிறது என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

Advertisement

இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19 ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகின்ற தேர்தலில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்றது.  இதனை அடுத்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.  இதில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 63.50% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  மீதமுள்ள தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.  பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க முழு வீச்சில் பரப்புரை மேற்கொண்டு வருகிறது.  அடுத்த கட்ட தேர்தல் மே மாதம் 7-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்,  அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளை குறிவைத்து அனைத்து கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக,  பிரதமர் மோடி இன்று (27.04.2024) கோவாவில் தேர்தல் பரப்புரை பேரணியில் உரையாற்றுகிறார்.  இதனிடையே காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா குஜராத்தின் வல்சாத் பகுதியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,  பாஜக ஜனநாயகத்தை பலவீனப்படுத்த விரும்புவதாக குற்றம் சாட்டினார்.  மேலும் நாட்டில் விலைவாசி கட்டுக்குள் வரவும்,  வேலையில்லை திண்டாட்டம் குறையவும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் எனக் கூறினார்.

Tags :
Election2024Elections with News7 tamilElections2024Lok Sabha ElectionLok Sabha Elections 2024Narendra modinews7 tamilNews7 Tamil UpdatesPMO Indiapriyanka gandhi
Advertisement
Next Article