Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மதத்தை வைத்து நாட்டை பிரிக்கும் பாஜக" - மநீம தலைவர் கமல்ஹாசன் சாடல்!

08:55 AM Mar 30, 2024 IST | Web Editor
Advertisement

மதத்தை வைத்து நாட்டை பிரிக்கும் பாஜக என மக்கள் நீதி மய்யம் கமலஹாசன் குற்றச்சாட்டியுள்ளார். 

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ளன. பிரச்சாரத்துக்கு 18 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஈரோடு மாவட்டம் அடுத்த வெப்படை நால்ரோடு பகுதியில் 'இந்தியா' கூட்டணி சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக கே.இ. பிரகாஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில், திமுக வேட்பாளரை ஆதரித்து திறந்தவெனில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

இதில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதரா செந்தில் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள் : சேலத்தில், திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அப்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் திரைப்பட நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது :

"ஈரோட்டில் நான் பிரச்சாரத்தைத் தொடங்க இரண்டு காரணங்கள் உண்டு. பெரியார் முதல் காரணம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது நீங்கள் காட்டிய அன்பு இரண்டாவது காரணம். தேர்தலில் போட்டியிடாமல் தியாகம் செய்து விட்டீர்களே என்று என்னிடம் கேட்கின்றனர். இது தியாகம் அல்ல, தமிழ்நாட்டின் வியூகம். தமிழ்நாட்டில் வளர்ச்சி என்பது பல தலைவர்கள் போட்ட அடித்தளம். மதிய உணவுத் திட்டம் என்பது காமராஜர் தொடங்கி எம்ஜிஆர், இன்று அதன் நீட்சியாக காலை உணவுத் திட்டமாக தமிழ்நாடு முதலமைச்சரால் விரிவுபடுத்தப்பட்டது.

நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட அனைத்து
திட்டங்களையும் இந்தியா முழுக்க நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் பிறகு உலக நாடுகளில் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா கண்டிப்பாக மாறும். எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி ஒட்டு மொத்த இளைஞர்களின் குரலாய் தம்பி உதயநிதி கேட்கிறார். அதற்கு பதில் சொல்லுங்கள். கடந்தாண்டு கனமழை மற்றும் வெள்ளத்தால் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கவில்லை.நாம் ஒரு ரூபாய் வரி கொடுத்தால், 29 பைசாதான் திரும்ப வருகிறது. சோறு போடும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசும் அரசு இது.

பொது எதிரியை வீழ்த்த ஜனநாயக சக்திகள் அமைத்திருக்கும் கூட்டணி இது. அப்படித்தான் இதை கொள்ள வேண்டும். இது அரசியல் கூட்டணி அல்ல. அதையும் தாண்டிய கூட்டணி. உங்களுக்கு எந்த அரசு வேண்டும்? மாணவர்களுக்குக் காலை உணவு கொடுக்கும் அரசா? நீட் தேர்வு கட்டாயப்படுத்தும் அரசா? மக்களுக்கு உரிமை தொகை கொடுக்கும் அரசா? மகளிர் பெற்ற பதக்கங்களை ஆற்றில் வீச வைக்கும் அரசா?மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் அரசு வேண்டுமா? கார்ப்பரேட் கடன்களைத் தள்ளி வைக்கும் அரசு வேண்டுமா? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கும் அரசு வேண்டுமா? ஏழைகளுக்கான அரசா? பணக்காரர்களுக்கான அரசா? எது வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.

மதத்தையும் அரசியலும் ஒன்றாக பிணைத்து அரசியல் செய்யும் எந்த அரசும் நிலைத்ததாகச் சரித்திரம் கிடையாது. மதத்தை வைத்து நாட்டை பிரிக்க பாஜக அரசு முயற்சி செய்கிறது" இவ்வாறு அவர் பேசினார்.

Tags :
#INDIAAllianceDMKElection2024Elections2024ErodeKamalHasanLoksabha ElectionMNM
Advertisement
Next Article