Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்துக்கள் அல்லாதோர் கேதார்நாத் கோயிலுக்குள் செல்ல தடை விதிக்க வேண்டும் - பாஜக கோரிக்கை!

இந்துக்கள் அல்லாதவர்கள் கேதார்நாத் கோயிலுக்குள் செல்ல தடைவிதிக்க வேண்டும் என உத்தரகண்ட் அரசை அம்மாநில பாஜக எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.
09:17 PM Mar 16, 2025 IST | Web Editor
Advertisement

உத்தரகண்டின் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் வழியில், நேபாளத்தைச் சேர்ந்த கழுதை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சிலர் இறைச்சி மற்றும் பிற அசைவ உணவுகளை சாப்பிடுவதாக பாஜக எம்எல்ஏ மற்றும் பூசாரிகள், புரோகிதர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement

இதனால் இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் செல்ல தடை விதிக்க வேண்டும் என உத்தரகண்ட் அரசை கேதார்நாத் பாஜக எம்எல்ஏ ஆஷா நௌடியல் , மற்றும் அக்கோயில் புரோகிதர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

அமைச்சர் சௌரப் பகுகுணாவுடன் இன்று நடைபெற்ற கேதர்நாத் யாத்திரை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார். கேதார்நாத் யாத்திரை வரும் மே மாதம் தொடங்க உள்ளநிலையில் இதற்கான மேலாண்மை கூட்டம் இன்று நடைபெற்றது.

இதுதொடர்பாக பேசிய அத்தொகுதியின் பாஜக எம்எல்ஏ,

“உத்தரகாண்டில் உள்ள நான்கு புனித தலங்களில் ஒன்றான கேதார்நாத்தில்  இந்துக்கள் அல்லாதோர் நுழைவதைத் தடை செய்ய வேண்டும். இந்தப் பகுதியில் பணிபுரியும் இந்துக்கள் அல்லாதோர் கேதார்நாத் கோயிலுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்கள் கேதார்நாத் பகுதிக்கு வருவதைத் தடை செய்ய வேண்டும்” என்று நௌடியல் கூறினார்.

Tags :
banBJP mlaKedarnath Shrinenon-Hindus
Advertisement
Next Article