Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்த பாஜக | 5-வது முறையாக முதல்வராவாரா சிவராஜ் சிங் சவுகான்?

12:31 PM Dec 03, 2023 IST | Web Editor
Advertisement

மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.  இந்த நிலையில் முதலமைச்சர் பதவி 5-வது முறையாக சிவராஜ் சிங் சௌகானுக்கு கிடைக்குமா? யார் இந்த சிவராஜ் சிங் சௌகான்? 

Advertisement

முதலமைச்சர் பதவி மீண்டும் சிவராஜ் சிங் சவுகானுக்கு கிடைக்குமா அல்லது புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  பாஜகவில் முதல்வர் பதவிக்கு ஏற்கனவே பலரின் பெயர்கள் பேசப்பட்டன.  தற்போது அரசியல் வட்டாரத்தில் முக்கியமாக 5 பெயர்கள் பற்றி தீவிர விவாதம் நடந்து வருகிறது.  அதில் முதனமையானவர்  சிவராஜ் சிங் சவுகான்.

மத்தியப்பிரதேசத்தில் முதல்வர் முகத்திற்குப் பதிலாக பிரதமர் மோடியின் பெயரில் பிரச்சாரம் செய்தது, பிராந்திய தலைவர்களின் சிறப்பான செயல்பாடு என பல காரணங்களை உள்ளடக்கிய பாஜகவின் கலவையான உத்திகள் பலனளித்தது போல் தெரிகிறது.  சிவராஜ் சிங் சவுகானின் லாட்லி லக்ஷ்மி யோஜனா திட்டமும் இந்தத் தேர்தலில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இது தவிர,  காங்கிரசுக்குள் ஏற்பட்ட கோஷ்டி பூசலின் விளைவுகளும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர சிவராஜ் சவுகான் போட்ட திட்டங்கள்:  

  • மத்தியப் பிரதேசத்தில் லட்லி பிராமின் யோஜனா திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்கள் மாதம் ரூ.1250 பெறுகின்றனர். இது முக்கிய திட்டமாக பார்க்கப்படுகிறது.
  • மாநிலத்தில் காங்கிரஸின் பாரம்பரிய வாக்காளர்களாகக் கருதப்படும் எஸ்சி-எஸ்டியினரிடையே கூட பாஜகவால் கால் பதிக்க முடிந்தது,  இதற்குக் காரணம் லட்லி பிராமின் யோஜனா என்று கூறப்படுகிறது.

தொடக்கத்தில் பின்தங்கியிருந்த பாஜகவுக்கு இந்தத் திட்டம் பெரிதும் பலன் அளித்து. அமோக பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைப் பிடித்ததால்,  முதல்வர் முகத்தை மாற்றுவது பற்றி இப்போது பேச்சுக்கள் எழுந்துள்ளன்.

மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் பிரபலத்தை கருத்தில் கொண்டு,  கட்சி அவரின் முதல்வர் பதவியை பறிக்கும் என்று தெரியவில்லை.  ஆனால் மத்திய தலைமையுடனான அவரது உறவுகள் மோசமடைந்தால்,  அவரது ஐந்தாவது பதவிக்காலம் அவருக்கு ஒரு பிரச்சனையாக மாறும் என கூறப்படுகிறது.

மறுபக்கம் பாஜக,  2024 லோக்சபா தேர்தல் வரை சிவராஜ் சிங் சவுகானை முதல்வராக வைத்திருக்க வாய்ப்புள்ளது.

Advertisement
Next Article