Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாஜக Branding Agency போல செயல்படுகிறது - #PortBlair பெயர்மாற்றம் குறித்து #RajyaSabaMP கனிமொழி சோமு குற்றச்சாட்டு!

10:12 PM Sep 13, 2024 IST | Web Editor
Advertisement

போர்ட்பிளேர் பெயர் மாற்றம் விவகாரத்தில் பாஜக ஒரு பிராண்டிங் ஏஜென்சி போல் செயல்படுகிறது என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு தெரிவித்துள்ளார்.

Advertisement

யூனியன் பிரதேசங்களின் ஒரு பகுதியான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகராக போர்ட் பிளேயர் உள்ளது. இந்நிலையில் போர்ட் பிளேயரின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

“காலனித்துவ முத்திரைகளில் இருந்து தேசத்தை விடுவிக்க வேண்டுமென்கிற பிரதமர் நரேந்திர மோடியின் கண்ணோட்டத்தின் ஒருபகுதியாக இன்று போர்ட் பிளேயரின் பெயரை ‘ஸ்ரீ விஜய புரம்’ என்று மாற்ற முடிவு செய்துள்ளோம். முந்தைய பெயர் காலனித்துவ மரபைக் கொண்டிருந்தாலும், ‘ஸ்ரீ விஜய புரம்’ நமது சுதந்திரப் போராட்டத்தில் அடைந்த வெற்றியையும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்கையும் குறிக்கிறது. 

நமது சுதந்திரப் போராட்டத்திலும், சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு. ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படைத் தளமாக விளங்கிய தீவுப் பகுதி, இன்று நமது மூலோபாய திட்டங்கள் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமான தளமாக விளங்குகிறது. நேதாஜி சுபாஷ் சந்திர நமது நாட்டின் முதல் தேசியக் கொடியை அங்குதான் ஏற்றினார். பல சுதந்திரப் போராளிகள் சுதந்திர தேசத்திற்காக போராடிய செல்லுலார் சிறையும் இதுவே” என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி சோமு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

” இந்தியாவின் மீதான காலனியாதிக்க அடையாளத்தை அழித்து "பாரம்பரிய" பெருமைக்குரிய இந்திய வரலாற்றை மீளுருவாக்கம் செய்கிறோம் என்று இந்த செய்திக்காக வாதிட முடிவு செய்வோர் கவனத்திற்கு. இதேபோல பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்று மாற்றங்களை இந்த உலகம் கண்டுகொண்டுதான் இருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட மத, இன அடையாளத் திணிப்பை எதேச்சதிகாரத் தொனியில் பாஜக ஒன்றிய அரசு செய்வது கண்டனத்திற்குரியது.

இந்த Port Blair மக்களுக்கு என்ன நன்மையை இந்த பெயர் மாற்றம் தரப்போகிறது என்று கேட்டால் "கண்ணாடியைத் திருப்பினால் எப்படி வண்டி ஓடும்" என்ற வாசகம் தான் நினைவுக்கு வருகிறது… GDP வளர்ச்சி பற்றி கேட்டால் ஃபார்முலாவை மாற்றுவார்கள். ஊரின் வளர்ச்சியைப்பற்றி கேட்டால் ஊரின் பெயரை மாற்றுவார்கள். திட்டங்கள் என்ன கொண்டு வந்தீர்கள் என்று கேட்டால் முந்தைய திட்டங்களின் பெயரை மாற்றுவார்கள்…! பாஜக வெறும் branding agency போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன சிறந்த உதாரணம் காட்டிட முடியும்..?

Tags :
kanimozhi nvn somu
Advertisement
Next Article