25வது நாளில் “பைசன்”: கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..!
‘பைசன்’ திரைப்படம் வெளிவந்து 25 நாட்களை கடந்துள்ள நிலையில் படக்குழுவினர் இதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
08:32 PM Nov 10, 2025 IST
|
Web Editor
Advertisement
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘பைசன்’. இப்படத்தில் துருவ் உடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இப்படம் ரூ. 78 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement
கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் பாராட்டுகளை பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்றுடன் ‘பைசன்’ படம் வெளிவந்து 25 நாட்கள் ஆகியுள்ளது. இதனை முன்னிட்டு பைசன் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
Next Article