Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குடியுரிமை பிறப்புரிமை - அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை !

அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு வாஷிங்டன் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
05:04 PM Jan 24, 2025 IST | Web Editor
Advertisement

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் கடந்த திங்கள்கிழமை பதவியேற்றார். அதனை தொடர்ந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். குறிப்பாக அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்தார்.

Advertisement

இந்த உத்தரவு பிப்ரவரி 19 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. டிரம்ப்பின் இந்த அரசாணை மூலம் அந்த குழந்தைகளின் குடியுரிமை பறிக்கப்பட்டால், மருத்துவ காப்பீடு போன்ற அரசின் அடிப்படை உதவிகள் அவர்களுக்கு கிடைக்காமல் போகும்.

மேலும் அவர்கள் பெரியவர்கள் ஆகும் போது அமெரிக்காவில் சட்டபூர்வமாக வேலை செய்யும் உரிமை, வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும். எனவே, இதற்கு எதிராக வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் உள்ளிட்ட 22 ஜனநாயக கட்சி தலைமை வகிக்கும் மாகாண நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில் அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு வாஷிங்டன் நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது. மேலும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான அதிபரின் உத்தரவை அமல்படுத்த வேண்டாம் என்றும் அமெரிக்க அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

Tags :
againstDonald trumpOrderPresidentUnited StatesWashington court
Advertisement
Next Article