Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Vijay-ன் சினிமா கெரியரில் எதிர்பார்ப்பை எகிற வைத்த திரைப்படங்கள்!

11:30 AM Sep 05, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆன திரைப்படங்கள் குறித்து இங்கு காணலாம்.

Advertisement

விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு  இயக்கியுள்ளார். இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பிரம்மாண்டமாக உலகெங்கிலும் 5000 திரைகளில் வெளியானது. தளபதி 69 படத்துடன், விஜய் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என அறிவித்துள்ள நிலையில், இந்த படத்தை விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளோடு பிரம்மாண்டமாக வெளியான விஜய்யின் திரைப்படங்களை இங்கு பார்ப்போம்.

துப்பாக்கி

விஜய்யின் சுறா, காவலன் படங்கள் சரியாக ஓடாத நிலையில், வெளிவந்த திரைப்படம் நண்பன். ஷங்கர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான திரைப்படம்தான் துப்பாக்கி. இது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. அதுபோல Blockbuster ஹிட்டும் அடித்தது.

துப்பாக்கி விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம். 2012 ஆம் ஆண்டே 106 கோடி வசூல் செய்து அசத்தியது. விஜய்யின் முதல் 100 கோடி படம் இதுதான்.

கத்தி

அழகிய தமிழ்மகன் படத்தைத் தொடர்ந்து, இரட்டை வேடத்தில் வெளியான திரைப்படம் கத்தி. மேலும் துப்பாக்கியை தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான திரைப்படம் கத்தி. இந்த திரைப்படமும் ரூ.130 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து மிரட்டியது.

தெறி

கத்தியைத் தொடர்ந்து வெளியான திரைப்படம் புலி. புலி எதிர்பார்த்த வெற்றியை அளிக்காத நிலையில், 2016-ல் வெளியான திரைப்படம் தெறி. விஜய்-அட்லி கூட்டணி முதல்முறையாக இணைந்த தெறி திரைப்படம், ரூ.175 கோடி வசூல் செய்து அசத்தியது. கத்தி வசூல் சாதனையை இப்படம் முறியடித்தது.

பீஸ்ட்

தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பீஸ்ட். சிவகார்த்தியேனின் டாக்டர் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பீஸ்ட். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மிகப்பிரம்மாண்டமான வெளியான இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணி என்றவுடனே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. காரணம் லோகேஷ் அதற்கு முன் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றிப் படமே. கார்த்தியின் கைதியை தொடர்ந்து இயக்கப்பட்ட படம்தான் மாஸ்டர். இதனால் எதிர்பார்ப்பு இன்னும் கூடியிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக 50% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மெர்சல்

தெறியின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் மெர்சல் திரைப்படத்தில் அட்லீ-விஜய் என்ற வெற்றிக் கூட்டணி இணைந்தது. மேலும் 3 கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருந்ததால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமானது. அதுபோலவே நல்ல வரவேற்பையும் பெற்றது. ரூ.260 கோடி வசூல் செய்து விஜய் கேரியரில் ஒரு மைல்கல் படமாக மாறியது.

சர்கார்

ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவானது சர்கார். இப்படத்தின் மூலம் விஜய்யின் அரசியல் வருகை குறித்த சந்தேகம் மக்களிடையே அதிகமானது. இப்படம் பல சர்ச்சைகளைக் கடந்து ரூ.280 கோடி வரை வசூல் செய்தது.

பிகில்

தெறி, மெர்சலைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 3-வது திரைப்படம் பிகில். இதிலும் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். விஜய் கேரியரில் ரூ.300 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் என்னும் சாதனையை இப்படம் நிகழ்த்தியது.

வாரிசு

வாரிசு திரைப்படமும் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில வெளியானது. ஆனால் ரசிகர்களின் முழுமையான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்றது. அஜித்தின் துணிவு படத்துடன் மோதிய விஜய்யின் வாரிசு படம் உலகளவில் ரூ.306 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் விஜய்யை நம்பர் ஒன் நாயகனாக மீண்டும் நிரூபித்தது.

லியோ

லோகேஷ் கனகராஜ் கூட்டணி 2-வது முறையாக இணைந்த லியோ திரைப்படம் உலகளவில் ரூ.587 கோடி வசூல் செய்து தற்போது வரை விஜய் கேரியரில் அதிக வசூல் செய்த படமாக நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.

Tags :
cinematamil industryTVK Vijayvijay
Advertisement
Next Article