முடிவுக்கு வரும் பிக்பாஸ் சீசன் 7 - இறுதி போட்டியாளர்கள் யார் யார்?
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரும் ஜன.14 அன்று நடைபெறுகிறது. பிக் பாஸ் 7 ஆவது சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா, மாயா, மணி, விஜய்வர்மா ஆகியோர் உள்ளனர். இவர்களில் பார்வையாளர்களின் குறைந்த வாக்குகளை பெற்ற விஜய் வர்மா மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறினார்.
இந்நிலையில் அடுத்த மிட் வீக் எவிக்ஷனில் விஷ்ணு விஜய் வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷ்ணு விஜய் டிக்கெட் டூ ஃபினாலேவில் டிக்கெட் பெற்று நேரடியாக இறுதி வாரத்துக்குள் நுழைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு தினேஷ், அர்ச்சனா, மாயா, மணி ஆகியோர் செல்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.