Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி?

05:41 PM Sep 03, 2024 IST | Web Editor
Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்ததை அடுத்து, நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி தமிழில் ஒளிபரப்பாக தொடங்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி. மொத்தம் 19 போட்டியாளர்களுடன் இதன் முதல் சீசன் தொடங்கியது. கடந்த ஏழு ஆண்டுகளாக, 7 சீசன்களாக மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது பிக் பாஸ்.  இந்த நிகழ்ச்சியின் 7 சீசன்களையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வந்தார் கமல்ஹாசன். சுமார் 7 ஆண்டுகள் கழித்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

கமல்ஹாசன் இல்லாத பிக் பாஸ் வீடு எப்படி இருக்க போகிறது? அவருக்கு பதில் எந்த பிரபலம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்? இப்படியான பல கேள்விகள் கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து எழும்ப தொடங்கியது.  இணையவாசிகளும் இந்த பிரபலம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

முன்னதாக, கமல்ஹாசன் சில வாரங்கள் ஓய்விலிருந்த போது நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் சிம்பு ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். மேலும், நடிகர் சரத்குமார், சிலம்பரசன், சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இதேபோன்று மூத்த நடிகை ரம்யா கிருஷ்ணன், நயன்தாரா ஆகியோரில் ஒருவர் தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது அந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கான முன்னோட்ட விடியோ புதுச்சேரியில் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதில் விஜய் சேதுபதி கலந்துகொண்டதாக கூறுகின்றனர். எனினும் விஜய் தொலைக்காட்சியின் முன்னோட்ட வீடியோ வரும்வரை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் இணையவாசிகள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் மனநிலையை நுணுக்கமாகப் புரிந்துகொள்ளவும், அவர்களுக்கு ஏற்ப தனது கருத்துகளை முன்வைக்கவும் கமல்ஹாசனுக்கு நிகராக, விஜய் சேதுபதி சிறந்த நபர் என ரசிகர்கள் கூறுகின்றனர். எனினும், பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் சேதுபதியின் சினிமா பயணத்தில் பெரும் பின்னடைவாக இருக்கும் எனவும் சிலர் வாதங்களை முன்வைக்கின்றனர். இதற்கு முன்பு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Big Boss TamilbiggbossKamal haasanNews7TamilReality ShowVijay sethupathi
Advertisement
Next Article