சந்திராயன் 3 வெற்றிக்கு பிறகு பொறியியல் பட்டாத்தாரிகள் இடையே மிகப்பெரிய மாற்றம்! - மயில்சாமி அண்ணாதுரை பேச்சு...
சந்திராயன் 3 வெற்றிக்கு பிறகு பொறியியல் பட்டாத்தாரிகள் இடையே மிகப்பெரிய
மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பெரி கல்லூரியில் அறிவியல் கண்காட்சி
நடைபெற்றது. இந்த கண்காட்சியில் செங்கல்பட்டு மாவட்ட முழுவதும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்காட்சி படுத்தினர்.
இதில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். மேலும், கண்காட்சியை பார்வையிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இதையும் படியுங்கள்:தொடர் கனமழை எதிரொலி! – செம்பரம்பாக்கம் ஏரியில் 90% நீர் நிரம்பியது…
அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:
அடுத்த தலைமுறையினர் அறிவியல் கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ளும் விதமாக
தங்கள் பயின்ற அறிவியல் பாடங்களில் இருந்து புதிய கண்டுபிடிப்புகளை
கண்டுபிடித்து காட்சிப்படுத்துவது வரவேற்கத்தக்கது.
சந்திராயன் 3 வெற்றிக்கு பிறகு பொறியியல் பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. 60 ஆண்டுகளுக்கு மேலாக சந்திராயன்-3 விக்ரம் லேண்டெர் சிறப்பாக பணியாற்றி நிலவை பற்றி கூடுதல் தகவலை நமக்கு தரும்.
நிலவு என்பது பூமியை சுற்றி சென்றாலும் அது ஒரே வட்டப்பாதையில் செல்வதில்லை
இன்னும் பல ஆண்டுகளுக்கு விக்ரம் லேண்டெர் சந்திராயனின் சிறப்பாக பணிபுரியும்
என்றார்.