பஞ்சாப் மாநிலத்தில் கரும்புக்கான விலையை உயர்த்தினார் பகவந்த் மான்!
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தியதையடுத்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உயர்த்தியுள்ளார்.
அரசு ஒப்புக்கொண்ட கரும்பு விலையை ரூ.11 உயர்த்தும் முடிவுக்கு முதல்வர் மான் ஒப்புதல் அளித்துள்ளார். கரும்பு விலை தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.380-ல் இருந்து ரூ.391 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் பகிர்ந்த எக்ஸ் பதிவில், பஞ்சாப் விவசாயிகளுக்கு இன்று நல்ல நாள். கரும்பு விலை ரூ.11 உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் – உச்ச நீதிமன்றம் அதிரடி!
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு மற்றும் மாநிலத்தில் கரும்பு ஆலைகளைத் திறப்பது தொடர்பாக விவசாயிகளுடனான சந்திப்புக்குப் பிறகு முதல்வர் மான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
கரும்பு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.70 உயர்த்தக்கோரி ஜலந்தரில் கடந்த 4 நாள்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். முதல்வர் மான் உறுதியளித்ததையடுத்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.