Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சதம் விளாசி பெத் மூனி ; இந்தியாவுக்கு 413 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!

இந்தியாவிற்கெதிரான ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 412 ரன்கள் குவித்துள்ளது.
06:23 PM Sep 20, 2025 IST | Web Editor
இந்தியாவிற்கெதிரான ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 412 ரன்கள் குவித்துள்ளது.
Advertisement

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில்  இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று சமனில் உள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் இன்று  நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 412 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளது. அந்த அணியில் சிறப்பாக ஆடிய ஜார்ஜியா , எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி ஆகியோர் அணியின் ரன் உயர்வுக்கு வித்திட்டனர். பெத் மூனி 75 பந்துகளில் 138 ரன்கள் குவித்தார்.  மேலும் ஜார்ஜியா, எல்லிஸ் பெர்ரி ஆகியோர் அரைசதம் விளாசினர். இந்தியா தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து 413 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடுகிறது.

Tags :
india(w)INDvsAUSlatestNewsSportsNews
Advertisement
Next Article