Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிறந்த இயக்குநர் சுதா கொங்கரா.. சிறந்த உரையாடலாசிரியர் இரா.சரவணன்...

08:42 PM Mar 06, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை சுதா கொங்கராவும், சிறந்த உரையாடலாசிரியருக்கான விருதை இரா.சரவணனும் பெற்றனர்.

Advertisement

தமிழ்நாடு அரசின் சார்பில் 2015-ம் ஆண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான திரைப்பட விருதுகள், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்காக சுதா கொங்கராவிற்கும், சிறந்த உரையாடலாசிரியர் விருது ‘கத்துக்குட்டி’ திரைப்படத்திற்காக இரா.சரவணனுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த இசையமைப்பாளர் விருது ‘உத்தம வில்லன்’ மற்றும் ‘பாபநாசம்’ திரைப்படத்திற்காக ஜிப்ரானுக்கும், சிறந்தப் பாடலாசிரியர் விருது ‘36 வயதினிலே’ திரைப்படத்திற்காக விவேக்கிற்கும் வழங்கப்பட்டது.

சிறந்த பின்னணிப் பாடகர் விருது ‘வை ராஜா வை’ திரைப்படத்திற்காக கானா பாலாவிற்கும், சிறந்த பின்னணிப் பாடகி விருது ‘36 வயதினிலே’ திரைப்படத்திற்காக கல்பனா ராகவேந்தர்க்கும், சிறந்த பின்னணிக்குரல் (ஆண்) விருது ‘36 வயதினிலே’ திரைப்படத்திற்காக கௌதம் குமார்க்கும், சிறந்த பின்னணிக்குரல் (பெண்) விருது ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்காக ஆர்.உமா மகேஸ்வரிக்கும் வழங்கப்பட்டது.

அதேபோல், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் (2014 – 2015) சிறந்த இயக்குநருக்கான விருது ‘புர்ரா’ திரைப்படத்திற்காக கே.மோகன் குமார்-க்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது ‘கண்ணா மூச்சாலே’ திரைப்படத்திற்காக விக்னேஷ் ராஜகோபாலனுக்கும், சிறந்த ஒலிப்பதிவாளர் விருது ‘கண்ணா மூச்சாலே’ திரைப்படத்திற்காக வி.சதிஷ்க்கும், சிறந்த படத்தொகுப்பாளர் விருது ‘பறை’ திரைப்படத்திற்காக ஏ.முரளிக்கும், சிறந்த படம் பதனிடுவர் விருது ‘கிளிக்’ திரைப்படத்திற்காக வி.சந்தோஷ்குமார்-க்கும் வழங்கப்பட்டது.

Tags :
awarddirectorFilm AwardsFilm Awards 2015Ira SaravananMaSubramanianMP SaminathanNews7Tamilnews7TamilUpdatesTN Govt
Advertisement
Next Article