#BesantNagar அன்னை வேளாங்கண்ணி தேர்பவனி திருவிழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தள, ஆடம்பரத் தேர்பவனி வான வேடிக்கை முழங்க பக்தர்களின் கரகோஷத்துடன் நடைபெற்றது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தள,
ஆடம்பரத் தேர்பவனி வான வேடிக்கை முழங்க பக்தர்களின் கரகோஷத்துடன் புறப்பட்டது. இந்த பவனி தேர் திருவிழாவில் 1000-திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மரியே
வாழ்க, மரியே வாழ்க என பக்தர்கள் உற்சாக கோஷமிட்டனர்.
சென்னை பெசன்ட் நகரில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற அன்னை வேளாங்கண்ணித்
திருத்தலத்தின் 52-ஆம் ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன்
தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், இன்று செபமாலை, நவநாள்
செபம், ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி ஆகியவை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அன்னையின் ஆடம்பரத் தேர்பவனியை சென்னை மயிலை
உயர் மறைமாவட்டம் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தேர் பவணியை தொடங்கி வைத்தார் இந்த விழாவை காண சென்னை உட்பட பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான
பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை கண்டு ரசித்தனர்.
அன்னை ஆடம்பரத் தேர்பவனி விழாவிற்கு தமிழக காவல்துறை சார்பில் 1000 போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் அசம்பாவிதங்கள் தடுக்கும் விதமாக மருத்துவ வசதியும் ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்பாடு
செய்யப்பட்டது.