எலான் மஸ்கை ஓரங்கட்டி உலகின் நம்பர்.1 பணக்காரர் ஆனார் பெர்னார்ட் அர்னால்ட்!
உலகின் பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறினார் LVMH சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட். இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி 11வது இடத்திலும், கௌதம் அதானி 16வது இடத்திலும் உள்ளனர்.
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் அந்த நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டார். இவர் டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ், போரிங் கம்பெனி பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். டெஸ்லா கார்கள் வெளியான சில நாள்களிலேயே டெஸ்லாவின் பங்குகள் பல மடங்கு உயர்ந்ததால் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். பின்னர், ட்விட்டர் நிறுவனத்தை இவர் அதிக விலை கொடுத்து வாங்கினார்.
தற்போது பணக்காரர்களில் பட்டியலில் முதல் இடத்தில் பிரெஞ்ச் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார். எலான் மஸ்க்கின் கார் நிறுவனமான டெஸ்லாவின் பங்கு தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி டெஸ்லாவின் பங்கு 13%க்கு மேல் சரிந்தது. அதே நேரத்தில், பெர்னார்ட் அர்னால்டின் LVMH நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வருகிறது.
உலகின் முதல் 10 பணக்காரர்கள் லிஸ்ட்:
- பெர்னார்ட் அர்னால்ட் (207.6 பில்லியன் டாலர்)
- எலான் மஸ்க் (204.7 பில்லியன் டாலர்)
- ஜெஃப் பெசோஸ் (181.3 பில்லியன் டாலர்)
- லாரி எலிசன் (142.2 பில்லியன்டாலர்)
- மார்க் ஜுக்கர்பெர்க் (139.1 பில்லியன் டாலர்)
- வாரன் பஃபெட்(127.2 பில்லியன் டாலர்)
- லாரி எலிசன் (127.1 பில்லியன்டாலர்)
- பில் கேட்ஸ் (122.9 பில்லியன் டாலர்)
- செர்ஜி பிரின் (121.7 பில்லியன்டாலர்)
- ஸ்டீவ் பால்மர்(118,8 பில்லியன்டாலர்)
மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 11-ம் இடத்திலும், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி 16-ம் இடத்திலும் உள்ளனர். முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 104.4 பில்லியன் டாலரும், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 75.7 பில்லியன் டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.