Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பணம் கேட்டு மிரட்டல் - மத்திய அமைச்சர் #HDKumaraswamy மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு!

05:10 PM Oct 04, 2024 IST | Web Editor
Advertisement

தொழிலதிபரிடம் ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

கர்நாடக தொழிலதிபர் விஜய டாடா என்பவர் அமைச்சர் குமாரசாமி மற்றும் JD(S) பிரமுகர் ரமேஷ் கவுடா ஆகியோர் மீது அம்ருதஹள்ளி காவல்துறையில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;

விஜய் டாடாவின் புகார் மனுவில், “சென்னப்பட்டணா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுவதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அக்கட்சி பிரமுகர் ரமேஷ் கவுடா என்னை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது நிகில் குமாரசாமி தேர்தல் செலவுக்கு ரூ.50 கோடி வழங்கும்படி கூறினார். மேலும் மத்திய அமைச்சர் குமாரசாமியும் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.50 கோடி கேட்டார். அதற்கு நான் தற்போது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் கேட்கும் அளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறினேன். அதற்கு குமாரசாமி, பணம் கொடுக்கவில்லை என்றால் வியாபாரம் நடத்த முடியாது என்று மிரட்டினார்.

ஏற்கனவே ரமேஷ் கவுடா கோயில் கட்டுவதாக கூறி ரூ.5 கோடி பணம் வாங்கினார். தற்போது மீண்டும் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். எனவே இது தொடர்பாக குமாரசாமி மற்றும் ரமேஷ் கவுடா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

இந்த புகாரின் பேரில் அம்ருதஹள்ளி காவல்துறை மத்திய அமைச்சர் குமாரசாமி மற்றும் ரமேஷ் கவுடா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
firH D KumaraswamyKarnataka Policeunion minister
Advertisement
Next Article