Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை!

07:47 AM Mar 05, 2024 IST | Web Editor
Advertisement

பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

பெங்களூருவில் உள்ள வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் மார்ச் 1 ஆம் தேதி 2 ஐஇடி குண்டுகள் வெடித்தன.  இரண்டு வெடிப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தன.  இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.  இந்த சம்பவம் குறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதன் மூலம் குற்றவாளியை அடையாளம் கண்டனர்.   அந்த குற்றவாளி சாம்பல் நிற சட்டை,  கருப்பு பேன்ட்,  முகமூடி அணிந்த வாறு கையில் இரண்டு பைகளுடன் வந்துள்ளார்.  பின்னர் ராமேஸ்வரம் ஓட்டலில் உணவருந்திவிட்டு கைகழுவும் இடத்தில் வெடிகுண்டு உள்ள பையை வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைத்தது.  இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.  இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிகாரிகள் பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக இன்று சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை முத்தையால் பேட்டை பிடாரியார் கோவில் தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடந்து வருகிறது. இதேபோல ராமநாதபுரத்தில் 4 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Tags :
bengaloreBengaluru Bomb blastbomb blastCafeChennaiNIANIA InvestigationRamanathapuramRameswaram Cafe
Advertisement
Next Article