Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கும்பக்கரை அருவியில் பத்தாவது நாளாக குளிக்கத் தடை!

12:40 PM Nov 12, 2023 IST | Student Reporter
Advertisement

வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் பத்தாவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

Advertisement

தேனி மாவட்டத்தின்  சில பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.  பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட்டக்கானல்,  வெள்ள கெவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வனச்சரகர் டேவிட் ராஜன் குளிக்கத் தடை விதித்தார்.

இதையும் படியுங்கள்: பொங்கல் அன்று ’லால் சலாம்’ படத்தோடு உங்களை சந்திக்கிறேன்.. மொய்தீன் பாய் குதாபீஸ்.. – ரஜினிகாந்த் பதிவு!

அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக  மழை குறைந்துள்ளது.  இருப்பினும் கும்பக்கரை அருவியல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறையவில்லை. இதனால் குளிக்க விதிக்கப்பட்ட தடை பத்தாவது நாளாக தொடர்வதாக தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் அறிவித்தார்.

Tags :
#KumbakaraibatheprohibitionKumbakaraiwaterfallNews7Tamilnews7TamilUpdatesProhibitiontenthdayTheniTouristswaterfall
Advertisement
Next Article