Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டிஜிட்டல் திரைகளை பார்க்க 2 வயது குழந்தைகளுக்குத் தடை! #Sweden நாட்டின் அதிரடி அறிவிப்பில் கூறப்பட்டிருப்பது என்ன?

07:06 PM Sep 03, 2024 IST | Web Editor
Advertisement

தொலைக்காட்சியோ அல்லது செல்போன் டிஜிட்டல் திரையோ எதையும் 2 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் பார்க்க அனுமதிக்க வேண்டாம் என்று ஸ்வீடன் நாட்டு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை, தொலைக்காட்சி மற்றும் செல்போன் திரைகளிலிருந்து தள்ளிவைக்க வேண்டும் என்று ஸ்வீடன் நாட்டு பொது சுகாதாரத் துறை பெற்றோருக்கு தெரிவித்துள்ளது. மேலும், இரண்டு வயதுக்கு மேற்பட்ட மற்றும் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளும், நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி அல்லது செல்போன் பார்க்க அனுமதிக்கலாம் என்றும் அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு முதல் 12 வயதுக்கு உள்பட்டவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

13 வயது முதல் 18 வயது வரையிலானோர் நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சியைப் பார்க்க அனுமதிக்கலாம் என்றும் சுகாதாரத் துறை குறிப்பிட்டிருக்கிறது. அதிக நேரம் குழந்தைகளை தொலைக்காட்சி அல்லது செல்போன் பார்க்க விடுவதால், அது அவர்களது வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவி விடுகிறது. ஸ்வீடன் நாட்டில் உள்ள 13 முதல் 16 வயதுடைய இளம் தலைமுறை பிள்ளைகள் ஒரு நாளைக்கு 6 மணி நேரமோ அல்லது அதற்கும் அதிகமான நேரமோ செல்போனைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : “மாநில பாடத் திட்டம் குறித்து #Governor கூறிய பிழையான கருத்தைத் திரும்ப பெறவேண்டும்” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வலிறுத்தல்!

சமூகத்துடன் இணையாமல், உடல் இயக்கம் இல்லாமல், மற்றவர்களுடன் பேசாமல் இவர்கள் வாழ்வது மற்றும் டிஜிட்டல் பயன்பாட்டால், இளைஞர்களின் உறங்கும் நேரம் குறைவதாகவும், நாட்டில் உள்ள 15 வயது சிறார்களில் பாதிக்கு மேல் போதுமான தூக்கம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார். குழந்தைகள் உறங்கும் போது செல்போன் பார்ப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், படுக்கை அறைக்குள் செல்போன் கொண்டு செல்வதை அனுமதிக்கக் கூடாது என்றும் ஸ்வீடன் நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்துகிறது. முன்னதாக, துவக்கப் பள்ளிகளில், மாணவர்கள் செல்போன் கொண்டு வருவதைத் தடை செய்ய ஸ்வீடன் அரசு திட்டமிட்டு வருகிறது.

Tags :
banneddigital screenseuropeNews7Tamilnews7TamilUpdatesSweden
Advertisement
Next Article