Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து திடீரென விலகிய வங்கதேச மூத்த வீரர்! ஏன் தெரியுமா?

09:52 PM Nov 07, 2024 IST | Web Editor
Advertisement

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து வங்கதேச அணியின் மூத்த வீரர் கை விரல் எலும்பு முறிவு காரணமாக விலகியுள்ளார்.

Advertisement

வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (நவம்பர் 9) நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கை விரல் முறிவு காரணமாக வங்கதேச அணியின் மூத்த வீரர் முஷ்பிகுர் ரகீம் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது:

“ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின்போது, வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரகீமின் இடது கையின் ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. எக்ஸ்-ரேவில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவர் குணமடைந்து வருவதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
afghanistanBangladeshMushfiqur Rahimodi
Advertisement
Next Article