Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#BANvsSA | வங்க தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி…தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

06:47 PM Oct 24, 2024 IST | Web Editor
Advertisement

வங்க தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற வங்க தேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 40.1 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 308 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கைல் வெர்ரியன்னே 114 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து, 202 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது 2-ஆவது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி ஆரம்ப கட்டத்தில் தடுமாறியது.

இதையும் படியுங்கள் :“டெல்லியில் ஜனவரி 1 வரை அனைத்து பட்டாசு கிடங்குகளுக்கும் சீல்” – #HighCourt அதிரடி உத்தரவு!

வங்காளதேச அணி 3-ஆவது நாளில் 7 விக்கெட்டுகளை இழந்து 283 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன் கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது. அதன்படி, வங்காளதேச அணி வீரர்களான மெஹிதி ஹசன் மிராஸ் 87 ரன்களுடனும், நயீம் ஹசன் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளும், கேஷவ் மகராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். மேலும், வங்காளதேச அணி இதுவரை 81 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில் 106 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் அந்த அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் டொனி டி சொர்சி 41 ரன்களும், கேப்டன் மார்க்ரம் 20 ரன்களும், ஸ்டப்ஸ் 30 ரன்களும், டேவிட் பெடிங்காம் 12 ரன்களையும் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Tags :
BangladeshBANvsSANews7Tamilnews7TamilUpdatesSAvsBANSouth Africa
Advertisement
Next Article