நேபாளத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது வங்கதேச அணி!
டி20 உலகக்கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
9வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 37-வது லீக் போட்டியில் வங்கதேசம் - நேபாளம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாள அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து வங்கதேச அணி பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதல் தடுமாற்றத்துடன் விளையாடிய அந்த அணி, 19.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 17 ரன்களும் மஹ்மதுல்லா மற்றும் ஹொசைன் தலா 13 ரன்களும் எடுத்தனர். நேபாள அணி தரப்பில் சோம்பால் கமி, திபேந்திர சிங், கேப்டன் ரோஹித் பவுடல், சந்தீப் லாமிச்சானே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நேபாள அணி களமிறங்கியது.