Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை - வனத்துறை அறிவிப்பு!

07:58 PM Dec 09, 2023 IST | Web Editor
Advertisement

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

Advertisement

விருதுநகர் மாவட்டம்,  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த நிலையில், பிரதோஷம், அமாவாசை நாட்களில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பெரும் அளவில் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். 

இதையும் படியுங்கள் : ‘ஸ்டார்’ திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

அதனை தொடர்ந்து, இக்கோயிலுக்கு கார்த்திகை மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டுக்காக டிசம்பர் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 13 ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில்,  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதையடுத்து சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

Tags :
bannedChathuragiri hill templedevoteesForest Departmentnoticerain fallviruthunagarWestern Ghats
Advertisement
Next Article