TVS நிறுவனத்தின் CNG ஸ்கூட்டர் எப்போது அறிமுகம்? வெளியான அப்டேட்!
பஜாஜ் நிறுவனத்தை தொடர்ந்து, TVS மோட்டார்ஸ் நிறுவனமும் "CNG ஸ்கூட்டர்" தயாரிப்பாளராக திட்டமிட்டுள்ளது.
பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் CNG பைக்காக ஃப்ரீடம் 125 என்ற பைக்கை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. இந்த பைக் ரூ 95,000 விலையிலிருந்து தொடங்குகிறது. பஜாஜின் கூற்றுப்படி, காற்று மாசு அளவைக் குறைக்கும் முயற்சியாக CNG பைக் அறிமுகப்படுத்தப்பட்டது.
பஜாஜ் நிறுவனம் ஃபிரீடம் 125 என்ற பைக்கை உலகின் முதல் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் பைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. சிஎன்ஜி மற்றும் பெட்ரோலுக்கான சிங்கிள் ஸ்விட்ச் கொண்ட பைக்கில் இருப்பது சிறப்பு. அதாவது பெட்ரோலில் இருந்து சிஎன்ஜிக்கு அல்லது சிஎன்ஜியில் இருந்து பெட்ரோலுக்கு மாற்றலாம்.
இதையும் படியுங்கள் : பீகாரில் மேலும் ஒரு பாலம் சரிந்து விழுந்தது! ஒரே மாதத்ததில் 15-வது சம்பவம்!
இந்நிலையில், பஜாஜை அடுத்து, TVS மோட்டார் நிறுவனமும் "CNG ஸ்கூட்டர்" தயாரிப்பாளராக மாற திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இந்த அடுத்த ஆண்டு முதலே அதை செய்லபடுத்த பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 125cc CNG ஸ்கூட்டரான அந்த புதிய திட்டத்திற்கும், TVS நிறுவனம் Code U740 என்று பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், TVS நிறுவனம், மாதம் ஒன்றுக்கு சுமார் 1,000 யூனிட் எரிவாயு அடிப்படையிலான ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இரு சக்கர எலெக்ட்ரிக் வாகன விற்பனை இந்தியாவில் சூடுபிடித்துள்ள நிலையில், இப்பொது இரு சக்கர CNG வாகனங்களின் விற்பனையும் விரைவில் அதிகரிக்கவுள்ளது.