"ஜாமின் பெறுபவர்கள் ‘கூகுள் லொக்கேசனை’ பகிர நிபந்தனை விதிக்கக்கூடாது" - உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஜாமின் பெற வேண்டுமானால் "கூகுள் லொக்கேசனை" விசாரணை அமைப்புகளிடம் பிணை பெறும் நபர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை நீதிமன்றங்கள் விதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் ஜாமின் பெற வேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட அந்த நபர், ஜாமீன் காலம் முழுவதும் தனது கூகுள் லொகேஷனை விசாரணை அமைப்புகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை நீதிமன்றங்களால் விதிக்கப்பட்டு வந்தது. இது அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளது எனவும், இது போன்ற நிபந்தனையை விதிக்க்கூடாது எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், “ஜாமின் நிபந்தனையாக ஜாமினில் வெளி வரும் நபர்களின் இருப்பிடங்களை, தொடர்ந்து காவல்துறை கண்காணிக்கும் வகையில், அவர்களின் இருப்பிடங்கள் குறித்த "கூகுள் லொகேஷன்" தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை நீதிமன்றங்கள் விதிக்க கூடாது” என உத்தரவிட்டது.