Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒடிசாவில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! - பாஜக முன்னிலை!

11:59 AM Jun 04, 2024 IST | Web Editor
Advertisement

 ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், ஒடிசாவில் ஆட்சி செய்து வரும், பிஜு ஜனதா தளம் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக,  சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளும் எண்ணப்படுகின்றன.

இந்நிலையில், ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 10 மணி நிலவரப்படி, ஒடிசாவில் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இதையும் படியுங்கள் : “தயவு செய்து யாரும் பின் தொடர வேண்டாம்” – ஷாலினி பதிவால் ரசிகர்கள் குழப்பம்!

ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 30 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 50 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. INDIA கூட்டணி 7 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

Tags :
AndhraBiju Janata DalLok Sabha electionsodishastate assembly electionsvote count
Advertisement
Next Article