Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சபாநாயகன் படத்தின் 'பேபி மா' பாடல் இணையத்தில் வைரல்!

10:19 AM Nov 27, 2023 IST | Web Editor
Advertisement

அசோக்செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள 'சபா நாயகன்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'பேபி மா' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

தமிழ் திரை உலகில் கடந்த 2013 ஆம் ஆண்டு 'சூது கவ்வும்' படத்தின் மூலம்  அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றி படங்களில் நடித்தவர்.  இவர் நடிப்பில் கடந்தாண்டு பல படங்கள் வெளியானது. சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம், எஸ்டேட் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

 

இதையும் படியுங்கள்:  ‘விடாமுயற்சி’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – சென்னை திரும்பிய அஜித்!

தற்போது சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் 'சபா நாயகன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தினை அரவிந்த் ஜெயபாலன், ஐயப்பன் ஞானவேல், கேப்டன் மேகவான் இசைவானன் ஆகியோர் இணைந்து தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.  மேலும்பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். 

சபா நாயகன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பேபி மா'  பாடலின்  லிரிக் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :
ashok selvanChandiniCS KarthikeyanKarthikaMegha Akashnews7 tamilNews7 Tamil UpdatesSaba Nayagan
Advertisement
Next Article