Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் நீக்கப்படுவார்" - பாகிஸ்தான் வீரர் #AhmedShejad

04:09 PM Sep 26, 2024 IST | Web Editor
Advertisement

கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் நீக்கப்படுவார் என பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அகமது ஷெஜாத் தெரிவித்தார்.

Advertisement

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர், அண்மையில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பைத் தொடரிலும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மிகவும் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 50 ஓவர் உலகக் கோப்பையின்போது பாபர் அசாமின் தலைமைப் பண்பு (கேப்டன்சி) கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அதன்பின், டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அதிலும் பாகிஸ்தான் அணி சரியாக செயல்படாத நிலையில், மீண்டும் பாபர் அசாமின் கேப்டன்சி மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

இதையும் படியுங்கள் : புனித நீராடும் பண்டிகை: 37 குழந்தைகள் உள்பட 43 பேர் உயிரிழப்பு… #Bihar -ல் சோகம்!

தற்போது டெஸ்ட் போட்டியில் ஷான் மசூத், ஒருநாள் டி20யில் பாபர் அசாம் கேப்டன்களாக இருக்கிறார்கள். விரைவில் சாம்பியன்ஷ் டிராபி பாகிஸ்தானில் தொடங்கவிருக்கிறது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் (டி20, ஒருநாள்) பாபர் அசாமுக்கு பதிலாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பாபர் அசாம் மீண்டும் சாம்பியன் டிராவி வரை கேப்டன் பொறுப்பில் தக்கவைக்கப்படுவார் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அகமது ஷெஜாத் தனது யூடியூப் பக்கத்தில் கூறியதாவது:

"சமீபத்தில் நடந்த கூட்டம் கேப்டன்சி (அணித் தலைவர்) குறித்தோ அல்லது தேசிய ஒப்பந்தம் குறித்தோ நடைபெறவில்லை. சாம்பியன்ஷ் டிராபி வரை பாபர் அசாம் கேப்டனாக செயல்படுவாரென மக்கள் சொல்கிறார்கள். ஆனால், இது தவறான தகவல். பாபர் அசாம் அவராகவே ராஜிநாமா செய்யாவிட்டால் கேப்டன் பொறுப்பில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் (பிசிபி) நீக்கப்படுவார். கேரி கிறிஸ்டியன் சாம்பியன் டிராபிக்கு முன்பு மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறார். புதிய வாய்ப்புகளை நோக்கி பயணிக்க வேண்டும்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
babar azamcaptaincyNews7Tamilnews7TamilUpdatesPakistan cricketResign
Advertisement
Next Article