”புரட்டாசி மாத பூஜைக்காக ஐய்யப்பன் கோவில் நடைத் திறப்பு”
கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணகான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையிட்டு விரதம இருந்து சபரிமலை வந்து ஐயப்பனை வழிபடுவார்கள்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைக்காக நடைத்திறக்கப்பட்டன. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனாரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஸ்ரீகோவிலை திறந்து வைத்து தீபாராதனை காண்பித்தார்.
மாதந்திர பூஜைகள்முடிவடைந்து 21 ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது .
முன்னதாக 20 ம் தேதி காலை 10 மணிக்கு பம்பையில் சர்வதேச ஐயப்பன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில் 19 மற்றும் 20 ம் தேதிகளில் பக்தர்களுக்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.