அயோத்தி ராமர் கோயில் - கடந்து வந்த பாதை...!
10:40 AM Jan 20, 2024 IST 
                    | 
                            Web Editor
                
                 
    
                
                
     
            
    
             
             
    
    
         
        
    
    
    
        
        
         
    
      
    
                 Advertisement 
                
 
            
        அயோத்தி ராமா் கோயிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழா நாளை மறுநாள் கோலாகலமாக (22.01.2024) நடைபெற உள்ளது. இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் விவகாரம் கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்.
                 Advertisement 
                
 
            
        - 1528 -ஆம் ஆண்டு அயோத்தியில், மொகலாய மன்னர் பாபர் மசூதியைக் கட்டினார்
 - 1853 - மசூதி கட்டப்பட்ட இடத்திற்கு உரிமை கோரி இந்து- முஸ்லிம்கள் இடையே மோதல்
 - 1859 - மசூதி கட்டப்பட்ட இடத்திற்கு இரு மதத்தினரும் செல்லலாம் என சமரசம்
 - 1885 - ராமர் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் விதானம் அமைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஃபைசாபாத் நீதிமன்றம்
 - 1949 - மசூதிக்குள் ராமர், சீதை சிலைகள் மர்மமான முறையில் வைக்கப்பட்டதால் மீண்டும் பதற்றம்
 - 1959 - சம்பந்தப்பட்ட இடத்தில் வழிபாடு நடத்த உரிமை கோரி இந்து அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு
 - 1962 - உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சன்னி வக்ஃபு வாரியம், மசூதி தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடியது
 - 1984 - பிரதமர் ராஜீவ் காந்தி, சம்பந்தப்பட்ட இடத்தில் இந்துக்கள் வழிபடலாம் என்று அனுமதி கொடுத்தார்
 - 1985 - அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட புதிய இயக்கத்தை தொடங்கியது விஷ்வ இந்து பரிஷத்
 - 1990 - ராமர் கோயிலுக்காக அத்வானி ரத யாத்திரை - பீகாரில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது
 
- 1992 - கர சேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது
 - 1994 - பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க நீதிபதி லிபரான் தலைமையில் ஆணையம்
 - 2002 - பாபர் மசூதி இடிப்பு குறித்த வழக்குகள் அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணை
 - 2003 - மசூதியின் கீழ் பகுதியில் கோயில் இருந்ததாக தொல்லியல் துறை அறிக்கை
 - 2010 - மசூதி இடிக்கப்பட்ட இடத்தை வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா அமைப்புகளுக்கு பிரித்து அளிக்க அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு
 - 2011-2019 - அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அனைத்து அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
 - 2019 - மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
 - 2020 - பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை
 - 2024 - அயோத்தி ராமர் கோயில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை
 
 Next Article