அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா! எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா குழு நிர்வாகிகள் அழைப்பிதழ் வழங்கினர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், எதிர்கட்சித்தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (1.1.2024 திங்கட் கிழமை) நேரில் சந்தித்து, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை, விழா குழுவினர் வழங்கியுள்ளனர்.