Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வசூலில் அசத்தும் அயலான்... படக்குழு வெளியிட்ட அறிவிப்பு...

03:03 PM Jan 16, 2024 IST | Web Editor
Advertisement

அயலான் படத்தின் வசூல் குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான, தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் சிவகார்த்திகேயனின்  ‘அயலான்’ ஆகிய இரண்டு படங்களுமே,  இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்களாகும். இந்த இரண்டு திரைப்படங்களும் அவற்றின் வித்தியாசமான மற்றும் தனித்துவமான கதைக்களத்தால் ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறது.

ஒரு தரப்பினர் இந்த இரு படங்களுக்குமே பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் நெகடிவ் விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள். இப்படி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், மக்களின் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ முதல் நாளில் ரூ. 3.2 கோடி வசூலித்தது. 2-வது நாளில் ரூ. 4.25 கோடி வசூலித்துள்ளதாக கூறப்பட்டது. 

இந்நிலையில், இப்படம் உலகளவில் இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கலவையான விமர்சனங்களையே படம் பெற்றிருந்தாலும் அயலான் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Ayalaanbox officeCaptain MillerNews7Tamilnews7TamilUpdatessivakarthikeyan
Advertisement
Next Article