Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வீட்டு கடன் திட்டங்கள் தொடர்பாக SBI விழிப்புணர்வு கண்காட்சி...

10:43 AM Nov 04, 2023 IST | Web Editor
Advertisement

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பில் வீட்டு கடன் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் அறியும் வகையில், GRIHA SAKTHI 2023" என்ற பெயரில் "MEGA PROPERTY SHOW" சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதோடு மட்டுமில்லாமல், முன்னணி கடன் வழங்கும் வங்கியாக செயல்படுகிறது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கி வரும் எஸ்பிஐ வங்கி, மேலும் ஒரு படி மேலே சென்று,  வீட்டுக் கடன் உள்ளிட்ட அனைத்து விதமான கடன் திட்டங்கள்,  அனைத்துதரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில்,  சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் GRIHA SAKTHI 2023" என்ற பெயரில் 3 நாட்களுக்கு ""MEGA PROPERTY SHOW" ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியை எஸ்பிஐ வங்கியின் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி தலைமை இயக்குநர் ரவி ரஞ்சன் தொடங்கி வைத்தார்.  இதில், சென்னை நெட்வொர்க் பொது மேலாளர் முரளி கிருஷ்ணா,  கிரடாய் துணை தலைவர் மெகுள் தோஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிராபர்ட்டி ஷோவில் DAC,  G square,  Steps Stone, The Nest Builders உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பிரபல வீட்டுமனை விற்பனை செய்யும் நிறுவனங்கள் SBI வங்கியுடன் கைகோர்த்து ஸ்டால்கள் அமைத்துள்ளன.

இந்த "MEGA PROPERTY SHOW"-வை பார்வையிடுவதன் மூலம் பிரபல நிறுவனங்களின் வீட்டுமனைகள்,  சலுகைகள் குறித்து ஒப்பீட்டு பார்த்துக் கொள்வதோடு,  வீட்டுக் கடன் பெறுவதற்கான வாய்ப்பையையும் ஏற்படுத்த முடியும் என்று SBI சென்னை நெட்வொர்க் பொது மேலாளர் முரளி கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.

3 நாட்கள் நடைபெறும் இந்த "MEGA PROPERTY SHOW" காலை 10.30 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.  குடும்பத்தினருடன் வரும் வாடிக்கையாளர்கள், குழந்தைகள் விளையாட பிளே ஏரியா உள்ளிட்ட பொழுதுப்போக்கு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  மேலும், வீட்டு கடன் செலுத்துவதற்கான கால வரம்பு 30 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்,  வீட்டுக் கடன் மூலம் சொந்த வீடு வாங்க முயற்சிப்பவர்கள் SBI வங்கி நடத்தும் இந்த MEGA PROPERTY SHOW-வை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற வங்கிகளை ஒப்பீடு செய்யும் போது SBI வங்கி கடன் வாங்க விரும்புபவர்களுக்கு சிபில் ஸ்கோர் 750க்கு மேல் இருந்தால்,  ஒரு வருடத்திற்கு 8.35 % வட்டி விகிதம் முதல் வழங்கப்படுகிறது என்று SBI தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி தலைமை இயக்குநர் ரவி ரஞ்சன் தெரிவித்தார்.

Advertisement
Next Article