Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தவெக தலைவர் விஜய் - மாணவர்கள் சந்திப்பு விழா...பாஸ் வழங்கும் பணி தொடங்கியது!

03:42 PM May 24, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக முதல் 3  இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாஸ் வழங்கும் பணி தொடங்கியது. 

Advertisement

கடந்த வருடம்  2022 -2023 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அந்த வகையில் 2-வது ஆண்டாக,  இந்த ஆண்டும் 2023 -2024 கல்வியாண்டில் தொகுதிவாரியாக முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.  இந்நிலையில் மாணவ, மாணவிகளை தேர்வு செய்யும் பணி நேற்று நிறைவடைந்துள்ளது.

மாணவர்களை தேர்வு செய்யும் பணி நிறைவுற்ற நிலையில்,  அவர்கள் விழாவில் பங்கேற்பதற்கான பாஸ் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.  இந்த பாஸ் காண்பித்தால் மட்டும் விழாவில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியதற்கு பின் பங்கேற்கும் முதல் விழாவாக இது உள்ளது. விழா ஜூன் 15 இருந்து 20 ஆம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு அடுத்தடுத்து கொடி அறிமுகம் விழா,  கட்சியின் மாநாடு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags :
actorstudentstvkTVK Vijayvijay
Advertisement
Next Article