Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் நடத்துவதை தவிருங்கள்" - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவுரை

03:47 PM Nov 26, 2023 IST | Web Editor
Advertisement

" வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் நடத்துவதை தவிருங்கள்" - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

 பிரதமர் மோடி இன்று மன் கி பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சியில் வானொலியின் மூலம் மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நினைவு கூர்ந்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர் தெரிவித்ததாவது..


” நவம்பர் 26 ஆம் 1949 ஆம் ஆண்டு இதே நாளில்தான் அரசியல் நிர்ணய சபை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.  அரசியலமைப்புச் சட்டத்தைத் உருவாக்க இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் ஆனது. இந்நாளில் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல நவம்பர் 26 ஆம் தேதியை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. இந்த நாளில்தான் நாடு மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளானது. ஆனால், அந்தத் தாக்குதலில் இருந்து மீண்டு, பயங்கரவாதத்தை நசுக்கியது இந்தியா. இந்த தாக்குதலில் உயிர் நீர்த்த துணிச்சலான தியாகிகளை இந்த தேசம் நினைவு கூர்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று நீர் பாதுகாப்பு. தண்ணீரைப் பாதுகாப்பது உயிரைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் குறைவானதல்ல. தண்ணீரை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு. தேசத்தை கட்டியெழுப்புவதில் பொதுமக்களும் பங்கு கொள்ளும்போது, அது நாட்டை முன்னேற்ற பாதைக்கு கூட்டி செல்கிறது.


இன்று, இந்தியாவில் மக்கள் பல மாற்றங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு இந்தியா நிறைய சாதனைகளை புரிந்துள்ளது.  சில குடும்பங்கள் வெளிநாடுகளில் திருமணங்களை நடத்துகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளை நமது  நாட்டிற்குள்ளே நடத்த வேண்டும் .  இதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரம் வலுப்பெறும்.  அவர்களாஇ UPI மற்றும் டிஜிட்டல் முறை மூலம் பணம் செலுத்த வலியுறுத்த வேண்டும் .

திருமணத்திற்காக பொருட்கள் வாங்கும் போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; இதனால் இந்திய சந்தை மதிப்பில் ரூ.5 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என வணிக அமைப்புகள் கணித்துள்ளன” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags :
Bridal ShoppingbusinessIndiaMan Ki BathPM ModiWedding
Advertisement
Next Article