ஹரித்வாரில் பனிச்சரிவு எச்சரிக்கை - குலுங்கும் பாலத்தை கடக்கும் மக்கள் என வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?
This News Fact Checked by ‘AajTak’
கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மார்ச் 2 ஆம் தேதி உத்தராகண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் பனிச்சரிவு ஏற்படுவதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. சமீபத்தில், உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில், மொத்தம் 54 தொழிலாளர்கள் பனியில் புதைந்தனர். அவர்களில் 46 பேர் மீட்கப்பட்டனர். ஆனால் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
அத்தகைய ஒரு காணொலியில் "ஹரித்வாரின் ராம் ஜூலா நடுங்குகிறது" என்று எழுதப்பட்டுள்ளது. அது எந்த நேரத்திலும் விழலாம். புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரும் அப்படிப்பட்ட இடத்திற்குப் போய் ஜாலியாக இருக்கவே கூடாது. இந்த சம்பவம் குஜராத்தின் மோர்பி சம்பவத்தை எனக்கு நினைவூட்டியது என எழுதப்பட்டிருந்தது.
உண்மையை எப்படிக் கண்டுபிடித்தோம்? :
வைரலான காணொலியின் முக்கிய பிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜில் தேடியபோது, நவம்பர் 9, 2024 தேதியிட்ட ஒரு பேஸ்புக் பதிவைக் கண்டோம் அதன் தலைப்பு 'கந்தகி தங்கப் பாலம்' என்ற ஹேஷ்டேக்கைக் கொண்டுள்ளது.
கண்டகி தங்கப் பாலம், பர்பத் மாவட்டத்தில் உள்ள குஷ்மாவையும் நேபாளத்தின் பாக்லங் மாவட்டத்தையும் இணைக்கிறது. இந்தப் பாலம் காளிகண்டகி நதியின் மீது கட்டப்பட்டுள்ளது.
வீடியோவில் காணப்படும் ஒரு நபரின் டி-சர்ட்டின் பின்புறத்தில் 'சில்ட்ரன் லைஃப் ஸ்போர்ட் கிளப்' என்று எழுதப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுக் கழகத்தின் பேஸ்புக் பக்கத்தை நாங்கள் கண்டோம் அதன்படி இந்த விளையாட்டுக் கழகம் நேபாளத்தின் பாக்லுங் பஜாரைச் சேர்ந்தது என தெரியவந்தது. இதற்குப் பிறகு கூகுள் மேப்பில் பாக்லங்கின் கண்டகி தங்கப் பாலத்தின் சில படங்களைப் பார்த்தோம். இவற்றில் ஒன்றில், பாலத்திற்குக் கீழே பாயும் ஆற்றின் கரையில் ஒரு கட்டிடம் தெரியும் இந்தக் கட்டிடம் வைரல் காணொலியிலும் தெரிகிறது.
அதேபோல ராம் ஜூலா ஹரித்வாரில் இல்லை ரிஷிகேஷில் உள்ளது என்றும், நீண்ட காலமாக பழுதுபார்க்கப்படாததால், இந்த பாலம் 2023 ஆம் ஆண்டில் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே
நடுங்கும் பாலத்தைக் கடக்கும் மக்களின் காணொலி இந்தியாவைச் சார்ந்தது அல்ல மாறாக நேபாளத்தில் எடுக்கப்பட்டது தெளிவாகிறது.
Note : This story was originally published by ‘AajTak’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.